
அகண்டா-2 தாண்டவம் படத்தின் டீசர் வெளியானது
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா.
கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் ‘அகண்டா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது.
இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இப்படம் டிசம்பர் மாதம் 5-ந்திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், ‘அகண்டா-2 தாண்டவம்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
டீசரை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
CATEGORIES Cinema

