
மீன் குத்தியதில் மீனவர் ஒருவர் மரணம்
ஆழ்கடலில் வைத்து மீன் குத்தி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர்.
இவர்கள் நேற்று (29) மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது வலையில் பட்ட பெரிய மீனை தூக்குவதற்கு முயற்சி செய்யும் போது கடலில் தவறி விழுந்த ஒருவர் மீது மீனின் கூர்மையான வாய் அவரது வயிற்றுப்பகுதியில் குத்தி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் ரஹ்மானிய ஜும்மாஆ பள்ளி வீதியை சேர்ந்த மீரா லெப்பை சஹாப்தீன் (வயது 47) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸாரும் மீன்பிடி துறைமுக கடல் ஓர பாதுகாப்பு படையினரும் மேற்கண்டு வருகின்றனர்.
ந.குகதர்சன்

