
92 பெட்ரோல், வெள்ளை டீசல் ,மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது ,
லங்கா வெள்ளை டீசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 289 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
ஒ க்டேன் 92 பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 305 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
லங்கா மண்ணெண்ணெய் விலை 07 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 185 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் லங்கா சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
CATEGORIES Sri Lanka

