
மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது
என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தித்வா தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மேலும் மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு விரைவில் தீர்வுக் காணப்படும் எனவும் அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சகல தரப்பினருடன் கலந்துரையாடி முரண்பாடற்ற தீர்வினை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

