
ஒரே மேடையில் நூறு இந்திய-இலங்கை கைவினைஞர்கள்
தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள தேசிய கைவினை மன்றத்தால் இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட “இந்து-இலங்கை கைவினைஞர்கள் மற்றும் கலாச்சார விழா” வியாழக்கிழமை (13) ஆரம்பமாகியது.
தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் ஆரம்பமாகிய இந்தக் கண்காட்சி நவம்பர் 16ஆம் திகதி வரை 4 நாட்கள் நடைபெறும்.
உள்ளூர் கைவினைஞர்களின் படைப்புகளுக்கு சந்தைப்படுத்தல் வசதிகளை வழங்குதல், அந்தக் கைவினைஞர்கள் தங்கள் படைப்புகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பை வழங்குதல், இலங்கையர்கள் வெளிநாட்டு கைவினைஞர்களின் படைப்புக்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குதல் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தற்போதைய நட்பை மேலும் வளர்ப்பது போன்ற நோக்கங்களுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

