கண்டி பொது வைத்தியசாலையின் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி

கண்டி பொது வைத்தியசாலையின் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி

கண்டி பொது வைத்தியசாலையின் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (12) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹரிஸ்பட்டு பகுதியை சேர்ந்த 71 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டும் போது, குறித்த நபர் கட்டடத்தின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )