
பொரலஸ்கமுவயில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்
பொரலஸ்கமுவ, மாலனி புலாத் சிங்கள மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கல்கிஸையை சேர்ந்த 25 வயதுடைய கிஹான் துலான் பெரேரா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீதியில் நடந்து சென்றபோது, முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இரு தரப்பினரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவி போலீஸ் கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் தெரிவித்தார்.

