கந்தானை துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி

கந்தானை துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி

கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை , காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் இராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹார என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )