லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை கிடைத்துள்ளது .

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இலங்கைக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினார் .

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக இந்த நன்கொடை குறிப்பிடத்தக்கது .

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )