
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார் .
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நண்பர்களுக்கு 25 மில்லியன் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக இன்று காலை எஸ்.எம். சந்திரசேன லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார் .
வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டு கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
CATEGORIES Sri Lanka

