
வீட்டிலிருந்த இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், நான்கு பேர் கொண்ட குழு ஒன்று, வீட்டிலிருந்த இரண்டு இளைஞர்களை ஆளரவமற்ற பகுதிக்கு கடத்திச் சென்று
துப்பாக்கி சூட்டை மேற்கொண்டது
இதன்போது 22 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் நடைபெற்றதுடன் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது .
நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது, கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே இதன்போது மோதல் ஏற்பட்டதுடன் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் சிறப்புப் படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞனின் மரணத்திற்குக் காரணமாம் என கூறப்படும் துபாய் அமிலவின் வீட்டிற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது.
குறித்த நபரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் நேற்று கிராமவாசிகள் தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.
கொலை குறித்து விசாரிக்க நான்கு போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி பதிவுகள் உட்பட சம்பவம் தொடர்பாக பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக இரண்டு பேரிடம் வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

