
சில பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு ; 457 பேர் கைது
காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 457 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 28 மோட்டார் சைக்கிள்கள் உட்பட , 77 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சுற்றிவளைப்பில் 1,365 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 3,288 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் உட்பட 1,584 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
CATEGORIES Sri Lanka

