
132 கிலோ கிராம் ஏலக்காயுடன் 4 பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.15 மில்லியன் பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காயுடன் நான்கு பேர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் கொழும்பு மற்றும் ஹட்டனைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பெங்களூரில் இருந்து வந்த விமானத்தில் அதிகாலை 1:00 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் எடுத்துவந்த பயணப்பொதிக்குள் 378 மதுபான போத்தல்கள் மற்றும் 132 கிலோகிராம் ஏலக்காயை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

