இலங்கை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 30% வரிஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல்

இலங்கை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 30% வரிஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல்

இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

முன்னதாக, இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி 44% வரிவிதித்திருந்தார்.

வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இலங்கையைத் தவிர, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 25% வரியும் பிலிப்பைன்ஸிற்கு 20% வரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )