
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த டுபாயில் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் என கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இருவரையும் நேற்று மலேசியா பொலிஸார் கைது செய்துள்ளனர் .
இந்த தகவல்களை இலங்கை பொலிசார் ஏற்கனவே சர்வதேச பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டறிந்துள்ளனர் .
பாதாள உலகக்குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ ,கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முக்கிய புள்ளியாக மூளையாகச் செயல்பட்டதாக
கூறப்படும் மன்தினு பத்மசிறி என்ற கெஹேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இருவரும் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
குறித்த இருவரின் கைது தொடர்பாக சர்வதேச பொலிஸார் அளவில் ஏற்கனவே சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
CATEGORIES Sri Lanka

