
வட இந்தியாவில் நிலநடுக்கம்
ஹரியானாவில் நிலநடுக்கம் இன்று காலை 9 மணியளவில் 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .
தலைநகர் டில்லி , உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் சில வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்தது.
சில பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
CATEGORIES Sri Lanka

