
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன் பிணை கோரி மனு தாக்கல்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன் பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு மனு அனுப்ப உத்தரவிட்டார்.

