
ஏமன் நாட்டில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா என்பவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார்.
பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் மெஹ்திக்கு,நிமிஷா மயக்க ஊசியை செலுத்திய போது அவர் உயிரிழந்துள்ளார்.இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை (16) மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்ததது.
இந்த சூழலில் தற்போது ஏமன் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
CATEGORIES India

