யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் (17) கைது செய்யப்பட்டுள்ளனர். 

குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 90 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து மூவரையும் கைது செய்ய பொலிஸார் , அவர்களை குருநகர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )