அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற ஈரானிய தூதருக்கு அவகாசம்!

அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற ஈரானிய தூதருக்கு அவகாசம்!

 அவுஸ்திரேலியாவுக்கான ஈரானிய தூதர் அஹ்மத் சடேகி மற்றும் மூன்று தூதரக ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சிட்னி மற்றும் மெல்போர்னில் நடந்த இரண்டு யூத எதிர்ப்பு தாக்குதல்களில் ஈரான் ஈடுபட்டதை அவுஸ்திரேலிய உளவுத்துறை அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளதாக குறித்த செய்திகளில் விபரிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அவுஸ்திரேலிய அரசாங்கம் ஈரானிய தூதருக்கு நாட்டை விட்டு வெளியேற ஏழு நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் தனது தூதர்களை தெஹ்ரானில் இருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )