மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்ய பாராளுமன்ற விசேட குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்ய பாராளுமன்ற விசேட குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அதனைச் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்தக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் முறை தொடர்பில் நீண்ட காலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் மற்றும் சட்ட திருத்தத் தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, ஏற்ற தேர்தல் முறை குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணியாகும்.

இதன்படி, முனீர் முலஃபர், சட்டத்தரணி சுனில் வட்டகல, அருண் ஹேமச்சந்திர, ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், லக்ஸ்மன் நிபுணராச்சி, ஷனக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், சமன்மலி குணசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க, சந்தன சூரியாராச்சி மற்றும் நிசாம் காரியப்பர் உள்ளிட்டோர் இந்த விசேட குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )