
பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் காலமானார்
‘கிரேஸ் அனாடமி’ மற்றும் ‘யூபோரியா’ தொடர்களில் நடித்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் தனது 53ஆவது வயதில் காலமானார்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அவர் நீண்ட காலமாக ALS (அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ்) என்ற கடுமையான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கிரேஸ் அனாடமி என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரில் டாக்டர் மார்க் ஸ்லோன் வேடத்தில் நடித்ததன் மூலம் எரிக் டேன் உலகளாவிய புகழ் பெற்றார்.
அதைத் தொடர்ந்து, இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமான யூபோரியா தொடரிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அவரது திடீர் மரணம் ஹாலிவுட் துறையையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலர் சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
CATEGORIES Cinema

