
ராகம, கந்தானை வத்தளை பகுதிகளில் இன்றும் தொடரும் பொலிஸ் சுற்றிவளைப்புகள்
ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் பாதுகாப்புப் படையினர் இந்தப் பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபம் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் .
கடந்த சில நாட்களில்,ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களையடுத்து இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளபடுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
பொலிஸார் , பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகளும் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக அமைச்சு தெரிவித்துள்ளது ..
நேற்று இரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் மட்டும் சுமார் 300 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இப்பகுதிகளை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெறுகின்றன .

