
வீட்டு பராமரிப்பாளர்களாக மற்றுமொரு குழு அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம்
வீட்டு பராமரிப்பபாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள 29 இலங்கைப் பெண் தொழிலாளர்களை கொண்ட புதிய குழுவினர் ஜூலை 7 மற்றும் 9 ஆகிய திகதிகளில் இஸ்ரேலுக்குப் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தெரிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வமாக வழங்கும் நிகழ்வு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.
இலங்கை மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை, மொத்தம் 379 பராமரிப்பாளர்கள் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
மேலும் இன்றுவரை இந்த ஒப்பந்தத்தின் கீழ் 2,269 இலங்கையர்கள் இஸ்ரேலின் பராமரிப்புத் துறையில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது .
இந்த துறையில் பயிற்றப்பட்டவர்கள் அனுப்பப்படுவதால் வேலைவாய்ப்பு எளிதாகின்றது என பணியகம் தெரிவித்துள்ளது ..

