
மதுகமவில் மனித எலும்புக்கூடுஅண்மையில் இறந்த ஒருவருடையது என தெரிவிப்பு
மத்துகம பிரதேசத்தில் மனித எலும்புகூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
மதுகம பொலிஸ் பிரிவின் உடவெல எண் 828 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட அட்டகெஹெல்கல்லே பகுதியிலுள்ள தேயிலைத் தோட்ட கால்வாயில் நேற்று மாலை இந்த மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதாக மதுகம பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் எலும்புக்கூடாக இருக்கலாமென கூறப்பட்டுள்ளது .
இந்த எலும்புக்கூடு ஆணா பெண்ணா என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

