இஷாரா  இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு கண்டுபிடிப்பு

இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு கண்டுபிடிப்பு

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து கைப்பற்றியுள்ளனர். 

இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான படகு எனத் தெரியவந்துள்ளது. 

கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னரே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )