அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் பதிவு

அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் பதிவு

மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

முதலில், தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு 11.24 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 1.56 மணியளவில் ரிக்டர் அளவில் 3.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலும், இன்று காலை 5.52 மணியளவில் திபெத் பகுதியில் ரிக்டர் அளவில் 3.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று நிலநடுக்கங்களாலும் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )