மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் மீண்டும் அரசாங்கத்திடம் கையளிப்பு

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் மீண்டும் அரசாங்கத்திடம் கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே, சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் நேற்று வாகனம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினார்.

ஜனாதிபதிகளின் உரிமைகளை (நீக்குதல்) சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, நாட்டின் 5வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் திருப்பி கையளிக்கப்படும் என கடந்த செப்டெம்பர் மாதம் 24காம் திகதி தெரிவித்திருந்தார் என மனோஜ் கமகே கூறினார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான வாகனமும் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த விடயங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சறுத்தலாக உள்ளது என மனோஜ் கமகே சுட்டிக்காட்டுகிறார்.

“எதிர்வரும் வாரத்தில் பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களைச் சந்தித்து மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காகத் தேவையான வாகனங்களை மீட்டெடுப்பதற்கான கோரிக்கையை வைப்போம்” என மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )