
திருமதி இலங்கை உலக அழகி 2025 இற்கான பட்டத்தை வென்ற சபீனா யூசுப்
“திருமதி இலங்கை உலக அழகி 2025” போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சபீனா யூசுப் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.
பிரமாண்டமாக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சபீனா யூசுப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப் பிரம்மாண்டமான சர்வதேச அழகிப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி உலக அழகி போட்டியில் அவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
சர்வதேச மேடைகளில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு உலகளாவிய தளத்தை திருமதி அழகிகளுக்கு இந்தப் போட்டி வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

