
இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதல் ; நான்கு இலங்கையர்கள் காயம்
இஸ்ரேல் நாட்டின் திமோனா பகுதியில் ஈரான் மேற்கொண்டதாக கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற வேளையில், சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ய முயன்றபோது அவர்கள் காயமடைந்ததாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

