திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது.

திரிபோஷா தயாரிப்பிற்குத் தேவையான தரமான மக்காச்சோளம் கிடைக்காத காரணத்தால் கடந்த சில மாதங்களாக உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இதன் விளைவாக, நாடு முழுவதும் பயனாளிகளுக்கான விநியோகம் சீரற்ற நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், வசந்த சமரசிங்க தலைமையிலான தலையீட்டின் மூலம், அமைச்சரவை அங்கீகாரத்துடன் தரப்படுத்தப்பட்ட மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அரச வர்த்தகப் பல்வகை கூட்டுத்தாபனம் உடன் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதால், உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த அமல் அத்தநாயக்க, தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய 24 மணி நேரமும் உற்பத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என கூறினார்.

மேலும், இந்த மாத இறுதிக்குள் திரிபோஷா கிடைக்காத அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கும் வகையில், சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகங்கள் வழியாக நாடளாவிய விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் மீதமுள்ள காலத்திலும் விநியோகம் தடையின்றி நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நிலவிய விநியோக பற்றாக்குறைக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )