மின்சாரத்தை துண்டிக்க வந்த ஊழியர்களை கோடரியால் தாக்க முயன்ற நபர்

மின்சாரத்தை துண்டிக்க வந்த ஊழியர்களை கோடரியால் தாக்க முயன்ற நபர்

வீடு ஒன்றின் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்கள் குழுவை தடுத்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார ஊழியர்களை, சம்பந்தப்பட்ட நபர் கோடரியால் தாக்க முயன்றதுடன் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நபர் தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் வெல்லவாய பொலிஸில் செய்த புகாரின் அடிப்படையில், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், இம்மாதம் 17 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )