இலங்கைக்கு விடுக்கப்பட்ட கடுமையான மின்னல் எச்சரிக்கை

இலங்கைக்கு விடுக்கப்பட்ட கடுமையான மின்னல் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான மின்னல் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்றுஇரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.அத்துடன் மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )