
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது
மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த கச்சா எண்ணெய் விலைகள், இன்று (20) காலை நிலவரப்படி கணிசமாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இன்று காலை பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.82 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. நேற்றைய தினம் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 115 டொலர்களையும் தாண்டியிருந்தது.
இதேவேளை, வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 93.43 டொலர்களாகக் குறைந்துள்ளது. இதன் விலையும் நேற்று 100 டொலர்களைத் தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

