
எரிபொருள் QR குறியீடுகளை மோசடியான முறையில் உருவாக்கியமை தொடர்பாக CID யில் முறைப்பாடு
எரிபொருள் QR குறியீடுகளை மோசடியான முறையில் உருவாக்கியமை தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
QR குறியீடுகளை உருவாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறையைத் தவறாகப் பயன்படுத்தி, முறைமை புதுப்பிக்கப்பட்ட
ஒரே நாளில் ஏனையோரின் வாகனங்களுக்காக அங்கீகரிக்கப்படாத குறியீடுகளைச் சிலர் உருவாக்கியுள்ளதாக அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்தார்.
ஒரே நாளில் சுமார் 600,000 புதிய QR குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் வெளிப்படுத்தினார்.
இவ்வாறான பிரச்சினைகள் இருந்தபோதிலும், QR குறியீடு முறையிலான எரிபொருள் விநியோகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போதைய கால அட்டவணையின்படி, இறுதி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியத்தைக் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரமே இன்று எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

