
25 ஆண்டுகால சர்வதேச விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக விண்வெளி வீரர் உடல் நல பாதிப்பால் மீண்டும் பூமி வருகை
25 ஆண்டுகால சர்வதேச விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களில் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் குழுவினரில் நால்வர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
இன்று அதிகாலை குழுவினரை ஏற்றி வந்த விண்கலம் , க்ரூ-11 பசிபிக் பெருங்கடலின் கலிபோர்னியா கடற்கரையில் தரையிறங்கியது.
அமெரிக்கர்கள் மைக் ஃபின்கே மற்றும் ஜெனா கார்டுமேன், ஜப்பானின் கிமியா யுய் மற்றும் விண்வெளி வீரர் ஒலெக் பிளாட்டோனோவ் ஆகியோர் 167 நாட்கள் விண்வெளியில் இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் பூமிக்கு திரும்பினர் .
குழுவினர் பாதுகாப்பாகவும் “நல்ல மனநிலையிலும்” இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குழு உறுப்பினரின் உடல்நலம் குறித்த புதுப்பிப்புகளை “சரியான நேரத்தில்” நாசா பகிர்ந்து கொள்ளும் என்றும் நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் கூறினார்.
சர்வதேச விண்வெளி நிலையம் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும்போது குறைந்தது ஏழு பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்படுவர் .
இந்நிலையில் நான்கு விண்வெளி வீரர்களின் பூமி திரும்பியதால்
தற்போது விண்வெளி நிலையத்தில், கிறிஸ் வில்லியம்ஸ் , விண்வெளி வீரர்கள் செர்ஜி குட்-ஸ்வெர்ச்கோவ் மற்றும் செர்ஜி மிகேவ் ஆகிய மூவரும் ஆய்வுப் பணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் மிகக் தீவிர மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே தெரிவு செய்யப்படுகிறார்கள். எனவே, அங்கு சென்ற பிறகு ஒருவருக்கு தீவிர உடல்நலக் குறைவு ஏற்படுவது மிகவும் அபூர்வம்.இந்த வீரருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
விண்வெளியில் நீண்ட காலம் எடையற்ற நிலையில் (Microgravity) இருத்தல் , எலும்புத் தேய்மானம், தசை பலவீனம் மற்றும் ரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுதல் உடல் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

