
இஸ்ரேலில் பணிபுரிய இலங்கை தொழிலாளுக்கு மீண்டும் அழைப்பு ,1520 அமெரிக்க டொலர் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு
இஸ்ரேல் நாட்டின் நிர்மாணத்துறையின் கீழ் இயங்கிவரும் புனரமைப்பு உபதொழில் வேலை வாய்ப்புக்கு தகுதியான பணியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
25-45 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தொழிற்துறை அனுபவம், முக்கிய தகுதியாக கருதப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பொது சீரமைப்பு, பீங்கான் ஓடு வேலை பிளாஸ்டர்ஆகிய வேலைவாய்ப்புகளுக்கு இணையதளம் மூலம் பணியாளர்கள் பதிவு செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதிகளைப் பெற்ற தொழிலாளர்களுக்கு 63 மாத கால ஒப்பந்தம் , மாதம் 1520 அமெரிக்க டொலர் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

