
வைக்கோலுக்கு தீ வைத்த விவசாயி அதே தீயில் சிக்கி உயிரிழப்பு
ஹிங்குரக்கொட, வாரஹேன பகுதியில் விவசாயி ஒருவர் தனது நெல் வயலில் ,வாய்க்கோலுக்கு தான் வைத்த தீயில் சிக்கி உயிரிழந்தார்.
ஹிங்குரக்கொட, போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த விவசாயி அடுத்த பருவத்திற்கு நெல் வயலைத் தயார் செய்வதற்காக தனது நெல் வயலை அறுவடை செய்த பின்னர் நெல் வயலில் எஞ்சியிருந்த வைக்கோல் மற்றும் வைக்கோலுக்கு தீ வைத்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை மற்றும் காற்று காரணமாக தீ அதி வேகமாக பரவியுள்ளது .
இந்த நபர் தீயில் சிக்கியதை நேரில் கண்டா அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஏனையவர்களுக்கு தகவல் அளித்தார். எனினும் அவர் பலத்த தீயில் சிக்கியவரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பாக ஹிகுரக்கொட போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

