நாட்டில் பல இடங்களில் கன மழைக்கு பெய்யும் சாத்தியம் .

நாட்டில் பல இடங்களில் கன மழைக்கு பெய்யும் சாத்தியம் .

மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 75 mm ற்கும் அதிகமான கன மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய, மேற்கு, தெற்கு , வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது
மணிக்கு 40-50 km வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )