கொழும்பின் பல பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிலில்
இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேர
நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 1 முதல் 15 வரையிலான பகுதிகளிலும், கோட்டே, கடுவெல, பத்தரமுல்ல, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியா, ஐ டிஎச், மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைபடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )