நடுவானில் பறந்த விமானம் தீப்பிடித்தது

நடுவானில் பறந்த விமானம் தீப்பிடித்தது

புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் எஞ்சின் தீப்பிடித்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்டா ஏர் லைன்ஸ் போயிங் 767 விமானம் ஒன்று, அட்லாண்டாவுக்குப் பறக்க முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானத்தின் இடது எஞ்சினிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் ,விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )