வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வடக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் அத்தோடு புத்தளம், திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தொட்டை போன்ற மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கல்பிடி தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (60-70) கி.மீ வேகத்தில் வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

இந்த நிலை இன்று காலை 10.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை அமுலில் இருக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பபு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கரையோர பகுதிகளில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )