இத்தாலி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்த விமானம்வீதியில் பயணித்த வாகனங்களும் தீப்பிடித்தது

இத்தாலி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்த விமானம்வீதியில் பயணித்த வாகனங்களும் தீப்பிடித்தது

இத்தாலியின் வட பகுதி ப்ரெஷியா நகரத்தில் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் செர்ஜியோ ரவாக்லியா மற்றும் அவரது 60 வயதான தோழி ஆன் மரியா டி ஸ்டெஃபானோ ஆகிய இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் சிசிடிவி காட்சிகளில் அந்த சமயத்தில் நெடுஞ்சாலையில் சென்ற சில வாகனங்களும் தீயில் சிக்கி எரிவதும் பதிவாகியுள்ளன .

விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த விபத்தில் இரண்டு வாகன சாரதிகள் காயமடைந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )