
அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறை வைப்பது கவலையாக இருக்கிறதுஎன சிறையில் ரணிலை சந்தித்த மஹிந்த கூறினார்
அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறை வைப்பது வருத்தமளிக்கிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
”அரசியல்வாதிகள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது சகஜமானது ,அதனால் அவர் இந்த பிரச்சினையை எதிர்கொள்வார்” என மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர் எனவும் , இது அரசிய பழிவாங்கல் தான் என தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் இன்னும் தன்னை நேசிக்கிறார்கள் எனவும் கூறினார்.
“நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்கள் எங்களை நேசிக்கிறார்கள்…” என சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

