
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளைக் குறைத்துள்ளது.
ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் விலை 2 ரூபாயால் குறைத்து,
277 ரூபாயாகவும்
மண்ணெண்ணெய் 2 ரூபாயால் குறைத்து 292 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து எரிபொருட்களின் விலைகளும் மாற்றமின்றி இருக்கும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

