தபால் வேலை நிறுத்தப் போராட்டத்தினால்விமான நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் பார்சல்கள்

தபால் வேலை நிறுத்தப் போராட்டத்தினால்விமான நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் பார்சல்கள்

தபால் பணியாளர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த அதிகளவிலான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் மாஅதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 5,000 கிலோகிராம் கடிதங்கள், பொதிகள் மற்றும் ஆவணங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சரக்குப் பகுதியில் தேங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஆறாவது நாளாக தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, ரயில் நிலையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் பெருந்தொகையான கடிதங்கள், பொதிகள் மற்றும் பொருட்கள் தேங்கி கிடப்பதாகவும், அவை இன்னும் எண்ணப்படவில்லை எனவும் தபால் மாஅதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

மேலும் வேலை நிறுத்தத்தினால், தபால் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பொது சேவைகள் மற்றும் அனைத்து கடித விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,பொதுமக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் வீடு திருப்பிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.பி.சி. நிரோஷன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )