ஐசிசி T20 உலகக் கிண்ணம் : அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்ற ஜிம்பாப்வே அணி

ஐசிசி T20 உலகக் கிண்ணம் : அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்ற ஜிம்பாப்வே அணி

ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே அணி அவுஸ்திரேலியா அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

இன்றைய தினம் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானதில்
இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

ஜிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட் (Brian Bennett) அதிகபட்சமாக 64 ஓட்டங்களை பதிவு செய்தார்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) மற்றும் கேமரூன் கிரீன் (Cameron Green) தலா ஒரு விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

தொடர்ந்து 170 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பதிவுசெய்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மேட் ரென்ஷா (Matt Renshaw) அதிகபட்சமாக 65 ஓட்டங்களை பதிவுசெய்தார்

பந்துவீச்சில் ஜிம்பாப்வே அணி சார்பில் Blessing Muzarabani
4 விக்கெட்டுகளையும் Brad Evans 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )