முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேகநபர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை இந்த மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இலங்கை சதோசா நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றது.

கைது செய்யப்பட்டவர்களில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மூத்த மகன் ஜோஹான் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சதோசாவின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )