சட்டவிரோத உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது<br />

சட்டவிரோத உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரபுரம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

செட்டிக்குளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (3) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நெரியகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )