
பகிடிவதை குற்றச்சாட்டில் மேலும் இரண்டு சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களை பகிடிவதை செய்து துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இதுவரையில் சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் தொடர்பாக 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவரொருவர் பகிடிவதை துன்புறுத்தலால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் மற்றும் ஏனைய பகிடிவதைக்குள்ளாகும் மாணவர்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது .

